Ad Code

கர்மாவின் பலன்கள்...!!!

கர்மாவின் பலன்கள்...!!!


கர்மாவின் பலன்கள்...!!!

ஒரு புகழ் பெற்ற விஷ்ணு கோவிலில், பணியாள் ஒருவர் இருந்தார்...!!!

 "கோவிலை பெருக்கி சுத்தம் செய்வது தான் அவரது பணி".......!!!*

 "அதை குறைவின்றி செவ்வனே செய்து வந்தார்"......!!

 "கோவில், தன் வீடு. இரண்டும் தான் அவரது உலகம்"......!!

"இதை தவிர வேறொன்றும் தெரியாது".......!!

தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து இறைவனை தரிசனம் செய்த வண்ணமிருந்தனர்.

  "இறைவன் இப்படி எல்லா நேரமும் நின்றுகொண்டே இருக்கிறானே".....…!!

"அவனுக்கு கஷ்டமாக இருக்காதா"......?
.என்று எண்ணிய அவர்....

  ஒரு நாள் இறைவனிடம்....!!!*

  “எல்லா நேரமும் இப்படி நின்று கொண்டே இருக்கிறாயே….!!!*

 "உனக்கு பதிலாக நான் வேண்டுமானால் ஒரு நாள் நிற்கிறேன்"...!!!*

 "நீ சற்று ஓய்வெடுத்துக் கொள்கிறாயா".......?
  என்று கள்ளம் கபடமில்லாமல் கேட்க,

அதற்கு பதிலளித்த இறைவன்.....,

“எனக்கு அதில் ஒன்றும் பிரச்சனையில்லை"......!!
"எனக்கு பதிலாக நீ நிற்கலாம்".....!!

ஆனால்..,
." ஒரு முக்கிய நிபந்தனை" ..!

"நீ என்னைப் போலவே அசையாமல் நிற்கவேண்டும்"......!!

 வருபவர்களை பார்த்து புன்முறுவலுடன் ஆசி வழங்கினால் போதும்.

"யார் என்ன சொன்னாலும்"....,

" கேட்டாலும் நீ பதில் சொல்லக் கூடாது"...!!!*

"நீ ஒரு சாமி விக்ரகமாக இருக்கிறாய் என்பதை மறந்துவிடக்கூடாது".........! என்று கூற,

 அதற்கு அந்த பணியாள் ஒப்புக்கொண்டார்.

அடுத்த நாள்.....,"இறைவனைப் போலவே அலங்காரம் செய்துகொண்டு".......,

 "கோவில் மூலஸ்தானத்தில் இவர் நின்று கொள்ள".......,

  இறைவனோ.......,
 " இவரைப் போல தோற்றத்தை ஏற்று"......,

  "கோவிலைப் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்து வந்தார்"......!!

 முதலில், 

 "ஒரு மிகப் பெரிய செல்வந்தன் வந்தான்".....!!

 "தன் வியாபாரம் சிறப்பாக இருக்கவேண்டும் என்று"......,

  இறைவனிடம் பிரார்த்தனை செய்துவிட்டு......,

 "ஒரு மிகப் பெரிய தொகையை உண்டியலில் காணிக்கையாக போட்டான்".......!!

 செல்லும்போது.....,

  "தவறுதலாக தனது பணப்பையை அங்கு தவற விட்டுவிடுகிறான்"........!!

  இதை " இறைவன் வேடத்தில் நின்று கொண்டிருக்கும் பணியாள் பார்க்கிறார்".......!!

 ஆனால், .
 "இறைவனின் நிபந்தனைப்படி அவரால் ஒன்றும் பேசமுடியவில்லை"....!!

 "அப்படியே அசையாது நிற்கிறார்"......!!

சற்று நேரம் கழித்து......,

  "ஒரு பரம ஏழை அங்கு வந்தான்"..!!!*

 "அவனிடம் உண்டியலில் போட ஒரே ஒரு ரூபாய் மட்டுமே இருந்தது"...!!!*

 “என்னால் இது மட்டும் தான் உனக்கு தர முடிந்தது".......!!

 " என்னை மன்னித்துவிடு இறைவா"........!!

 "என்னை ரட்சிக்கவேண்டும்"....!!

  என் குடும்பத்தில் ரொம்ப வறுமை.....!!

"மிக கஷ்டமாக இருக்கிறது இறைவா"......!!

  "உன்னை நம்பியே வாழ்கிறேன் ஐயனே".......!!

  எனக்கு ஒரு வழி காட்டு இறைவா” ......

 என்று மனமுருக  கண்கள் மூடி பிரார்த்தனை செய்தான்.

 கண்ணை திறந்தவனுக்கு எதிரே,

 " அந்த செல்வந்தன் தவறவிட்ட பணப்பை கண்ணில் பட்டது"........!!

 " உள்ளே பணத்தை தவிர".....

 " தங்கக் காசுகளும் சில வைரங்களும் கூட இருந்தன"........!!

 " இறைவன் தனக்கே தன் பிரார்த்தனைக்கு செவிமெடுத்து அதை அளித்திருக்கிறான் என்றெண்ணி".........,

 "அப்பாவித்தனமாக அதை எடுத்துக் கொண்டான்"......!!

"இறைவன் வேடத்தில் நின்றிருந்த  சேவகர் இதை கவனித்தார்" ......!!
.
"வாய் விட்டு  எதுவும் சொல்ல முடியவில்லை"......!!

சிறிது நேரம் கழித்து......,

 "வேறு ஒரு கப்பல் வியாபாரி வந்தான்"......!!

 "ஒரு நீண்ட தூர பயணமாக கப்பலில்  அவன் செல்லவிருப்பதால்".....,

 "இறைவனை தரிசித்து அவர் ஆசி பெற வேண்டி வந்தான்"......!!

  "இறைவனிடம் பிரார்த்தனை செய்தான்"......!!

 அந்த நேரம் பார்த்து......,

 "பணப் பையை தொலைத்த செல்வந்தன்".......,

 "காவலர்களுடன் திரும்ப கோவிலுக்கு வந்தான்"......!!

"கப்பல் வியாபாரி  பார்த்து".....
   “இவர் தான் என் பணப்பையை எடுத்திருக்க வேண்டும்".......!!

 "இவரை பிடித்து விசாரியுங்கள்”......,
 என்று காவலர்களிடம் கூற,

 காவலர்களும் அந்த கப்பல் வியாபாரியை பிடித்து செல்கிறார்கள்.

 “இறைவா என் பணத்தை அபகரித்தவரை அடையாளம் காட்டியமைக்கு நன்றி......!!”

  என்று அந்த செல்வந்தன் இறைவனைப் பார்த்து நன்றி கூறிவிட்டு செல்ல,

  இறைவன் வேடத்தில் இருந்த பணியாள் ..!!!*

 இறைவனை நினைத்து..., “இது நியாயமா".....?
 "அப்பாவி ஒருவன் தண்டிக்கப்படலாமா"......?

 "இனியும் என்னால் சும்மாயிருக்க முடியாது"…...!!*
 என்று கூறி,

  “கப்பல் வியாபாரி திருடவில்லை".......!!

 " தவறு அவர் மீது இல்லை"....!!.

  என்று இறைவன் வேடத்தில் நின்றிருந்த  பணியாள்....,

  "நடந்த உண்மைகளை அனைவரிடமும் சொல்கிறார்".......!!

  அந்த ஏழையிடம் பணப்பையை வாங்கி கொண்டு செல்வந்தர் சென்றார்......!!

 "கப்பல் வியாபாரி விடுவிக்கப்பட்டார் "......!!

"இரவு கோவில் நடை சாத்தப்படுகிறது"......!!

 "இறைவன் வருகிறார்"....!!

  இறைவனுக்கு பதிலாக நின்று கொண்டிருந்த  பணியாளிடம்........,

 " இன்றைய பொழுது எப்படியிருந்தது என்று கேட்கிறார்"........!!

 “மிகவும் கடினமாக இருந்தது".......!!

 " உன் வேலை எத்தனை கஷ்டம் என்பதை புரிந்துகொண்டேன்"........!!

 "ஆனால் ஒரு நல்ல காரியம் செய்தேன்….”......

  என்று காலை கோவிலில் நடந்ததை கூறினான்.

இறைவனோ இதை கேட்டவுடன் மிகவும் அதிருப்தியடைந்தார். 

“நாம் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தப்படி நீ ஏன் நடந்து கொள்ளவில்லை"...….?

 "என்ன நடந்தாலும் பேசக்கூடாது"......, "அசையக்கூடாது என்ற என் நிபந்தனைகளை".......,

" நீ ஏன் மீறினாய்"..….?

 "உனக்கு என் மீது நம்பிக்கை இல்லை"........!!!

 "இங்கு வருபவர்களது சூழ்நிலையை அறியாதவனா நான்".....!!

 “செல்வந்தன் அளித்த காணிக்கை".......,

 "தவறான வழியில் சம்பாதித்தது"......!!

  "அது அவனோட மொத்த  செல்வத்தில் ஒரு சிறு துளி தான்".......!!

 "ஒரு துளியை எனக்கு காணிக்கையாக அளித்துவிட்டு"...!!!*

 "நான் பதிலுக்கு அவனுக்கு நிறை தரவேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான்"......!!

 ஆனால்....,
  "அந்த ஏழை கொடுத்ததோ".....,

   "அவனிடம் எஞ்சியிருந்த இருந்த ஒரே ஒரு ரூபாய் தான்".........!!

  இருப்பினும்....
  " என் மீது முழு நம்பிக்கை வைத்து என்னை வணங்க வந்தான்".......!!

இந்த சம்பவத்தில்,

 " கப்பல் வியாபாரியின் தவறு எதுவும் இல்லை"......!!!*

  இருந்தாலும்......,

இன்றைக்கு அவன் திட்டமிட்டபடி கப்பல் பயணம் செய்தால்......,

 "விபத்தை சந்திக்க நேரிடும்"........!!

 " புயலில் தாக்குண்டு அவனும் அவன் கப்பலும் காணாமல் போயிருப்பார்கள்"........!!

 அதிலிருந்து அவனை காக்கவே ......,

 "அவனை தற்காலிகமாக திருட்டு பட்டம் சுமத்தி"......,

 " சிறைக்கு அனுப்ப நினைத்தேன்".......!!

 "அந்த ஏழைக்கு அந்த பணமுடிப்பு போய் சேரவேண்டியது சரி தான்"........!!

 "அவன் அதை நான் கொடுத்ததாக எண்ணி போற்றுவான்".......!!

இதன் மூலம்......,
 "அந்த செல்வந்தனின் கர்மா ஓரளவாவது குறைக்கப்படும்".....!!

 "அவன் பாவப் பலன்கள் துளியாவது குறையும்"......!!


 இப்படி.....,
  "ஒரே நேரத்தில் அனைவரையும் நான் ரட்சிக்க நினைத்தேன்"....!!

 ஆனால்,

 "நீயோ என் எண்ணங்கள் எல்லாம் உனக்கு தெரியுமென்று நினைத்து"...,

 "உன் எண்ணங்களை செயல்படுத்தி"......,

" அனைத்தையும் பாழ்படுத்திவிட்டாய்.” என்றான் இறைவன் கோபத்துடன்.....!

 சேவகன்,
 "இறைவனின் கால்களில் விழுந்து தன் தவறுக்கு மன்னிக்க வேண்டினான்:.....!!

“இப்போது புரிந்துகொள்".....!!!*

  "நான் செய்யும் அனைத்திற்க்கும் காரணம் இருக்கும்"......!!!*

அது ஒவ்வொன்றையும்...!!!*

 "மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாது"......!!!*
 "அவரவரது கர்மாவின் படி பலன்களை அளிக்கிறேன்"......!!!*

 "நான் கொடுப்பதிலும் கருணை இருக்கிறது"......!!!*

 "கொடுக்க மறுப்பதிலும் கருணை இருக்கிறது.”.......!!!*

 என்றான் இறைவன் புன்னகைத்தபடி.....!!!

Post a Comment

0 Comments