இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் ’வலிமை’ படத்தின் ஷூட்டிங் நாளை முதல் ஹைதராபாத்தில் துவங்கவுள்ளது.
கடந்த ஆண்டு வெளியான ’நேர்கொண்ட பார்வை’ வெற்றிக்குப் பிறகு அஜித், எச் வினோத், போனி கபூர் கூட்டணி மீண்டும் ‘வலிமை’ மூலம் இணைந்துள்ளார்கள். கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டு பின்பு விதிமுறைகள் தளத்தப்பட்டன. அதனால், கடந்த மாதம் முதல் வலிமைப்படத்தின் ஷூட்டிங் சென்னையின் புறநகர் பகுதிகளில் நடைபெற்று வந்தது. அஜித் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார்.
அவரது ரேஸ் காட்சிகளும் சண்டைக் காட்சிகளும் சென்னையில் படமாக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் நாளை முதல் ஹைதராபாத்தில், இப்படத்தின் அடுத்தக்கட்டக் காட்சிகள் படமாக்கவுள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments