கருமாத்தூர்பொன்னாங்கன்வாசல் ஒச்சாண்டம்மன் கோயில்
மதுரையில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மதுரைக்கும் தேனிக்கும் இடையே சாலை அமைக்கும் பணி நடந்தது.
அந்த சாலை கருமாத்தூர் ஒச்சாண்டம்மன் கோயில் வழியாக செல்லும்படி திட்டமிடப்பட்டதற்கு கருமாத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கோயில் முன்பு குவிந்தனர்.
அங்கு வந்த ஆங்கிலேய அதிகாரி கோயிலை
அகற்றி விட்டு சாலை பணியை தொடங்க உத்தரவிட்டார்.
பணியாட்களும் கோயில் முன்பிருந்த கல் யானையை
அகற்ற முயன்றனர். ஆனால், முடியவில்லை.
அப்போது ஊர் மக்கள், ‘இந்த யானையை அகற்ற முடியாது.
எங்கள் கோயில் கல்யானை கரும்பு தின்னும்;
வெள்ளை யானை வேதம் ஓதும்’ என்றனர்.
வாய்விட்டு சிரித்த ஆங்கிலேய அதிகாரி,
‘இதெல்லாம் நடக்காது’ என சவால் விட்டார்.
உடனே கல் யானையின் சிலையை சுற்றி திரையிடப்பட்டு,
கட்டுக்கட்டாக கரும்பு போடப்பட்டது.
சிறிது நேரம் கழித்து திரையை விலக்கியபோது
கரும்பு வெறும் சக்கையாக கிடந்துள்ளது.
அத்துடன் அந்த ஆங்கிலேய அதிகாரியும்
அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்துள்ளார் நோய்வாய்ப்பட்ட அவர், ஒச்சாண்டம்மனை மனமுருக வேண்டினார்.
இதனை தொடர்ந்து வெள்ளை யானை வேதம் ஓதியதையடுத்து
அந்த ஆங்கிலேய அதிகாரி குணமடைந்ததாக சொல்கிறார்கள்.
இதன் பின்னரே அமைக்கப்படவிருந்த சாலை,
கோயிலுக்கு பாதிப்பு இல்லாமல் மாற்றுப்பாதையில் போடப்பட்டது.
இன்றும் மதுரை - தேனி சாலையில் கருமாத்தூர் நுழையும் இடத்தில், மிகப்பெரிய வளைவை காணலாம்.
கருமாத்தூர் பொன்னாங்கன் வாசல் ஒச்சாண்டம்மன் கோயில் யானை வாசல்

0 Comments