நடிகர் ரஜினிகாந்த், விஜய் என தமிழின் முன்னணி நடிகர் நடிகைகள் எல்லோரும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார்கள். ரசிகர்களுடன் நேரடி தொடர்பில் இருப்பதால் உடனுக்குடன் தகவல்களை பகிர்ந்துகொள்கிறார்கள். அவர்களுக்கு ஃபாலோயர்ஸ்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள். நடிகர் சிம்பு சில ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைதளங்களில் இருந்து விலகினார். அதனால், அறிக்கைகள் மட்டுமே சினிமா பி.ஆர்.ஓ.க்கள் மூலம் தந்துகொண்டிருந்தார்.
இந்நிலையில், சிம்பு மீண்டும் சோசியல் மீடியாவில் இணைந்துள்ளார். இன்று காலை 9.09 மணிக்கு ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், யூடியூப் ஆகிய தளங்களில் கால் பதித்துள்ளார் சிம்பு. இது தொடர்பான ஒரு வீடியோ ஒன்றையும் சிம்பு பகிர்ந்துள்ளார். அதில் உடற்பயிற்சி, நடனம், பாரம்பரிய சண்டைக்கலை உள்ளிட்டவற்றை அவர் கற்பது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
தன்னுடைய பயணங்களையும், அதன் அனுபவங்களையும் சிம்பு தன் யூ டியூப் பக்கத்தில் பகிர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. Atman-SilambarasanTR என்ற பெயரில் உள்ளது சிம்புவின் யூடியூப் பக்கம். சிம்புவின் சமூக வலைதள வரவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். #SilambarasanTR என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments