"பயிற்சி பெறாத இந்த சிறுமியின் திறமை, திகைக்க வைக்கிறது" என்று இந்த வீடியோவைப் பகிர்ந்து அமிதாப் பச்சன் எழுதியுள்ளார்.
View this post on InstagramUntrained talent .. simply astounding ?? !! Jutti nikal gai but the show must go on .. !! ???
ஹரியானாவின் பாடலுக்கு ஒரு சிறுமி அற்புதமாக நடனமாடும் வீடியோயை அமிதாப்பச்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஆரஞ்சு துப்பட்டாவுடன் கருப்பு நிற உடையணிந்த அந்த சிறுமி, அப்னே சாஷர் கே ஆஜ் பாடலுக்கு அனைவரையும் ஈர்க்கக்கூடிய சிறப்பான நடனத்தை வெளிப்படுத்துகிறார்.
பலராலும் ரசிக்கப்பட்ட இந்த சிறுமியின் நடன வீடியோவை அமிதாப் பச்சன் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் பகிர்ந்த பிறகு மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் இதனை பார்வையிட்டனர். ஏறக்குறைய மூன்று நிமிடம் ஓடும் இந்த வீடியோவில் பாதியிலேயே, குறிப்பாக உற்சாகமாக ஒரு இடத்தில் அவர் நடனமாடும்போது தனது காலணிகளில் ஒன்று கீழே விழுகிறது. ஆனால் அது அவரது நடனத்தை எந்த வகையிலும் பாதிக்காமல் தொடர்கிறார். இந்த வீடியோ பற்றி அமிதாப் பச்சன் கூறுகையில் "பயிற்சி பெறாத திறமை .. திகைக்க வைக்கிறது" என்று கூறியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments