கோழியை கட்டி அணைத்து பாசம் காட்டும் சிறுவனின் வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
ட்விட்டரில் Simon BRFC Hopkins என்ற ட்விட்டர் கணக்கு, குழந்தைகள் மற்றும் விலங்குகளின் அபிமான வீடியோக்களை நாள்தோறும் பதிவிட்டு வருகிறது. சமீபத்தில் இப்பக்கத்தில் வெளியான ஒரு வீடியோ ட்விட்டரில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
அந்த வைரல் வீடியோவில், ஒரு சிறுவன் தரையில் உட்கார்ந்திருக்கும்போது, ஒரு கோழி அச்சிறுவனை நெருங்கி வருகிறது. கோழியை சிறுவன் வாரி அணைத்துக் கொள்ள, கோழி மார்பில் சாய்ந்து சிறுவனை வருடி நிற்கிறது. இந்த வீடியோவை பார்ப்பதற்கு அவ்வளவு அழகாகவும் நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
Human kindness ❤️ pic.twitter.com/ZQLg0LV1oz
— ⚽ Simon BRFC Hopkins ⚽ (@HopkinsBRFC) October 21, 2020
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments